நான் வேலை செய்யும் இடத்தில் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர் துப்பரவு பணியாளராக வேலை செய்கிறார். என்னை கண்டால் காய் என்பார். நானும் அவரைக் கண்டால் காய் என்பேன். ஒரு சில நேரம் சிறிய சம்பாசனைகள் நடப்பதுண்டு. இல்லாவிட்டால் அவர் தன்வேலை. நான் என் வேலை.
இன்று அவர் என் அலுவலகத்திற்குள் திடீர்ரென்று வந்தார். நான் வழமையாக அவர் செய்யும் காரியத்திற்கு வந்திருக்கிறார் என்று எண்ணினேன். வந்தவர் தனது சம்பள படிவத்தை தந்து இதை ஆங்கிலத்தில் மாற்றித்தர வேண்டும் என்றார். எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. அவரை நினைத்தல்ல என்னை நினைத்து. தலையின் வழுக்கல் சிலவேளைகளில் பெய்யான வின்பத்தை உருவாக்கிவிடுகிறது. ‘மூஞ்சுறு தான் போகக் காணேல்ல விளக்குமாறையும்
துாக்கிக் கொண்டு போனதாம்’ எண்டு ஊரில அடிக்கடி சொல்லுறது எனக்கு நியாபகம் வந்தது. பிலிப்பைன்ஸ்சில் கடன் வாங்க நோர்வே மொழியில் இருக்கும் சம்பள படிவம் சிக்கல் கொடுப்பதாகச் சொன்னார். முதலாவது பிரச்சனை அந்த அலுவலகத்தில் ஆங்கிலத்தில் மட்டமாக இருக்கும்
என்னை அவர் தேடிவந்தது. என்மீது அவருக்கு அவ்வளவு நம்பிக்கையா
அல்லது நான் ஒரு இளிச்ச வாயன் என்பதை அவரும் கண்டுபிடித்தாரா? ஏதோ ஒன்று. இரண்டாவது அவருக்கு ஆங்கிலம், நோர்வேர்ஜியன், கணனி பற்றிய அறிவு மிகவும் கம்மி. கல்வி எவ்வளவு முக்கியமானது என்பதை அவரைப் பார்த்தபோது புரிந்தது. ‘எண்டாலும் மண்டைக்க ஏறாட்டி நான் என்ன செய்யிறது எண்டு ஒரு சமாதானம் எங்களிட்ட தயாரா இருக்குது.’ சிலவேளை சில முளைகள் சிலதுகளை மட்டும்தான் கிரகிக்கும். அவரைமாதிரி, எங்களை மாதிரி சந்தர்ப்பத்தைக் கோட்டைவிட்டு மொபைல் போனில பெடியள் சுந்தரர் எங்கயோ போட்டு எங்கயோ தேடிகணக்கா தேடுறாங்கள். செரி பறுவாய் இல்லை. எனக்கு கூகிள் மொழி பெயர்ப்பு இருக்கிறது. அவருக்கான அலுவலை செய்து கொடுப்பதில் நான் இப்போது மும்மரம். மனிசன் ஒண்டல்ல மூன்று படிவத்தை மொழி பெயர்க்க சொல்லித் தந்து விட்டார்.

செய்து தந்தால் பணம் தருவதாயும் சொல்லுகிறார். ஆசை யாரைத்தான் விட்டது?