சுகந்திரத்திற்கு பின்பான இலங்கையில் அந்நாட்டு தேசியக்கொடியில் இருக்கும் வாள் , சிங்கம் ஆகியவை என்ன சொல்கிறது? சிங்கம் மனிதத்தின் நண்பன் என்கிறதா? வாள் பௌத்தத்தின் ஊன்றுகோல் என்கிறதா? அந்தக் கொடியோ , நாடோ சிறுபாண்மை இனங்களின் உரிமையை பாதுகாத்ததாக வரலாறு கிடையாது. பாதுகாக்காவிட்டாலும் பறுவாய் இல்லை, அவர்களை அச்சுறுத்தி அழிப்பதையே அந்த நாடு செய்து வருகிறது. அது யாரும் மறுக்க முடியாத வரலாற்று உண்மை. திரைமறைவில் சிறுகச் சிறுக செய்வதால் அநியாயங்கள் நியாயமாகிவிட முடியாது. தமிழ் தேசியம் என்பது திடீரென முளைத்து வந்ததல்ல. பயத்தில் விளைந்த சிங்களத் தேசியத்தினால் துட்டகைமுனு காலம் தொடக்கம் சிங்களவரால் வளர்க்கப்பட்டது. அதில் இருந்து தம்மை பாதுகாக்க தமிழரும் அதைக் கையில் எடுத்தனர். பின்பு அது தவறான கைகளில் போனது வேறுகதை. அன்று தொடக்கம் இன்றுவரை சிறுபாண்மை இனங்களை அச்சுறுத்தி அரச பயங்கரவாதத்தால் அரசியல், பொருளாதார, சமுக அடிமைகளாக வைத்திருக்கும் நாட்டின் கொடியை யார் மதிப்பார்கள்? எப்படி மதிப்பதற்கு மனது வரும்? அரசியல் இலாபங்களுக்காக அதை துாக்கிப் பிடிக்கலாமே தவிர சாமானிய மனிதர்களாய் அதற்கு எங்களால் மதிப்பு கொடுக்க முடியாது. அதற்கு மதிப்பு கொடுக்கும் வண்ணம் இனியாவது சிங்கள அரசுகள் சிறுபாண்மை இனங்களை முதலில் மதிக்கட்டும். தங்களை மாற்றிக் கொள்ளட்டும்.

அரசியல் வாதிகளை மட்டும் குறை சொல்ல முடியாது. ஒரு நாட்டின் அரசை வாக்கு போட்டு தெரிந்து எடுப்பவர்கள் யார்? பொரும்பாண்மை மக்களின் அதரவோடுதானே அரசு நடக்கிறது? இலங்கையில் சர்வாதிகாரத்தால் ஆட்சி அமைக்கப்படவில்லையே? அத்தால் சிங்கள மக்களுக்கும் இந்தக் கொடுமையில் ஒருவித தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. அதைப்போல தமிழர் சார்பில் செய்யப்பட்ட சில சம்பவங்களுக்கு தமிழர்களும் தங்களது தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நீங்கள் சொல்வதுபோல பதவி ஏற்கும் போது அவர் இதைக் கதைத்திருக்க வேண்டும் என்பது செரியானதே. அதற்காக சதாரண மக்கள் மனதில் பதிந்துவிட்ட வடு நியாயமற்றது என்பதல்ல.

அரசியல் வாதிகளையும் மக்கள்தானே உருவாக்குகிறார்கள்? பராளமன்றம் அனுப்பி வைக்கிறார்கள்? சிங்கள மக்கள் தேசிவாத்தில் மூழ்கிவிட்டதால்தானே தேசியவாதம் பேசும் கட்சிகள் தொடர்ந்தும் அந்நாட்டில் வெல்லுகின்றன? ஜேவிபி போன்றவர்கள்கூட தத்துவத்திற்கு ஏதிராக தேசியம் பேசித்தானே வாக்கு பெற வேண்டி இருக்கிறது? கடும் தேசியம் மக்களிடமும் இருக்கிறது. மக்களாகிய நாங்களும் விழிப்போடு இருக்க வேண்டும். உண்மையை புரிய வேண்டும். மக்கள் துாங்கினால் அல்லது கடும்தேசியத்தில் தம்மை இளந்தால் நாடு, இனம் என்பன நல்வழியில் செல்ல முடியாது. விட்டுக்கொடுப்பால்தான் சமாதானம் உருவாக முடியும். சிறுபாண்மை இனங்களின் உரிமை கொடுக்கப்பட்டால்தான் நாடு அமைதியடையும். அடக்கி ஆளும் அநாகரிகமான காலம் அல்ல இந்த யுகம்.