48149_245298535585383_774145682_nஒவ்வொரு எழுத்தும் வித்தியாசமானவை. அந்த வித்தியாசம் இல்லாமல் மொழியில்லை. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். அவன் பல குறைகளுடனும், நிறைகளுடனும் படைக்கப்பட்டிருக்கிறான். ஒரு மனிதனால் இலகுவாக செய்யக்கூடிய  காரியம் மற்றைய மனிதனால் தலைகீழாகா நின்றாலும் செய்ய முடியாது  போய்விடுகிறது. இது தலைகீளாகவும் வரலாம். எழுத்தை இரசிப்பபர்களைவிட எழுத்துப்பிழைகளை இரசிப்பவர்களும் நிறையவே இருக்கின்றனர் என்பது இப்போது புரிகிறது. அவர்களையும் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் தனித்துவம் அப்படி. கவலையீனம் மாத்திரம்  எழுத்துப்பிழைக்கு காரணம் என்று நினைத்தால் நீங்கள் தவறு செய்கிறீர்கள். எழுதுபவன் யாரும் தான் எழுத்துப்பிழை விட்டிருக்கிறேன் என்பது தெரிந்து அதை விடுவது இல்லை. அப்படி எவரும் விடவும் மாட்டார் என்பது எனது தாழ்மையான எண்ணம். எழுதுபவன் கண்களுக்கு அந்தப்பிழைகள் தட்டுப்பட்டால் அவன் நிடசயம் திருத்திய பின்புதான் அதைப் பிரசுரிப்பான். துர்ரதிஸ்ரவசமாக கருத்தில் கண்ணுன்றுவதால், படைப்பின் விசித்திரத்தால் அவனது கண்களுக்கு அனேக பிழைகள் தட்டுப்படுவதில்லை. எழுத்துப்பிழை திருத்துவதற்கு பிறிதாகவே அச்சகங்களில் ஆட்கள் வைத்திருக்கிறார்கள். பிழை தெரியாது தவிப்பவர்கள் பிழைதிருத்துவதற்கும், பிழைதிருத்துவதை தொழிலாகச் செய்பவர்களுக்கும் நிட்சயம் நிறையவே வேறுபாடுகள் உண்டு. அப்படி இருந்தும் பிரசுரிக்கப்படும் புத்தகங்களிலேயே எழுத்துப் பிழைகள் இருப்பதை கணலாம். நான் தமிழை பிழையாக எழுதுவதை ஆதரிப்பதற்காக இந்த கட்டுரையை எழுதவில்லை. அவர்கள் பிழை விடுவதற்கும் காரணம் உண்டு என்கிற அணுகுமுறையில் பார்க்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். ஐரோப்பியரைப்போல (அவர்களிலும் 100 வீதமும் அல்ல) காரணம் இல்லாது காரியம் இல்லை என்கின்ற ஆராய்ச்சி கையாளும் விடயங்களில் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

நோர்வேயின் கடந்தகால வெளிநாட்டு அமைச்சராக இருந்தவர் Thorvald Stoltenberg.  அவரது மகன் Jens Stoltenberg  கடந்தகாலப் பிரதம மந்திரியாக இருந்தார்.  Jens Stoltenberg  கிற்கு ஒரு சகோதரி உள்ளார். அந்த சகோதரி போதைவஸ்திற்கு அடிமையானவர். அதை பகிரங்கமாக அவரது தந்தை ஒப்புக்கொண்டு, தாங்கள் அதில் இருந்து மகளை விடுவிப்பதற்கு எடுத்த முயற்சிகள் பற்றி விபரித்தனர். அந்த மகளோடு சேர்ந்து பேட்டிகள் கொடுத்தார்கள். அதைப்போல நோர்வேயின் கடந்தகாலப் பிரதமமந்திரியான  Kjell Magne Bondevik பிரதமமந்திரியாக இருக்கும் போததே  மனநலம் பாதிக்கப்பட்டார். அவர் அதை மறைக்கவில்லை. அதை வெளிப்படையாக அறிவித்ததோடு அதற்காக வைத்தியமும் செய்தார்.

இதில் இருந்து நாங்கள் என்ன அறிந்து கொள்ள முடிகிறது?  குறைகள் இல்லாத மனிதர்கள் இல்லை. குறைகளை மூடிமறைப்பது, அதைக்கண்டு பயந்து அதில் இருந்து தப்பித்துப் போகும் தந்திரம். அது செரியான  முடிவாக இருக்க முடியாது. குறைகள் இருப்பதை ஒப்புக்கொண்டு அதை நிவர்த்தி செய்ய முயற்சிக்கும் ஐரோப்பிரின் மப்பாண்மை வரவேற்கத்தக்கது. அதை நாங்கள் பாடமாக எடுத்துக் கொள்வதில் தப்பிருப்பதாக நான்  நினைக்கவில்லை. நாங்கள் குறைகளை, பிழைகளை ஒத்துக் கொள்வதில் பின்நிற்கிறோம். அப்படி ஒத்துக் கொள்வபர்களை கேலிசெய்வது எங்கள் பளக்கமாக இருக்கிறது. ஐரோப்பியரோடு ஒப்பிடும்போது எங்கள் பக்குவம் எப்படி இருக்கிறது என்று சிந்தித்துப் பாருங்கள்?

என்னுடைய ஏழத்துப்பிழைகளை கண்டுவிட்டு சிலர் இரகசியமாக மின்னஞ்சலில் என்தைத் தொடர்புகொண்டு நீங்கள் ஒரு எழுத்தாளராய் இருந்தும் எழுத்துப்பழை விடலாமா என்று கேட்பார்கள். அப்படி இருந்தால் உங்கள் மதிப்பு போய்விடும் என்று கவலைப்படுவார்கள். அவர்கள் அக்கறையை மதிக்கிறேன். அதற்காக எழுத்துபிழை விடுவதுபற்றி நான் இரகசியம் காக்க வேண்டும் என்று  எண்ணவில்லை. அல்லது இனி புதிதாக எழுத்துப் பளகிவந்து நான் எழுதவேண்டும் என்றும் நினைக்கவில்லை. எனது பிரச்சனை எனக்குத் புரிகிறது. அதை எப்படி கையாளலாம் என்கின்ற வித்தியாசங்களும் ஓரளவு புரிகிறது. மருத்துவம், மூளை ஆகியவை பற்றி அறிவை வளர்த்துக் கொள்ளாது எழுந்தமானத்தில் குறை சொல்பவர்கள் பற்றி கவலைப்பட முடியாது.  ஐரோப்பியர்களில் பலர் ஒரு பிரச்சனையை ஆளமாக அலசுவதற்கும் நாங்கள் எழுந்த மானத்தில் ஒரு முடிவுக்க வருவதற்கும் காரணம் என்ன? நாங்கள் பலவிடயங்களையும் ஆளமாக அறிவதில்லை. அறிந்தாலும் அதைப்பற்றி மற்றவர்களோட பகிர்ந்து கொள்வதில்லை. தேடல் என்பது என்னிடம், உன்னிடம், அவர்களிடம் என்பதா  அனைவரிடமும் மிகவும் சொற்பமாகவே இருக்கிறது.

எனக்கு உதவித்தாதியாக படிப்பதற்கு ஓஸ்லோவில்  சந்தர்ப்பம் கிடைத்தது. நான் அதைப் படிப்பதற்காக ஒரு பாடசாலையில் சேர்ந்தேன். எங்களுக்கு குன் சண்ட்னஸ் என்கின்ற ஆசிரியை பொறுப்பாக இருந்தார். இங்கு ஆசிரியர் காலசாலையில் பலவிதமான பாடத்திட்டங்கள் உண்டு. அத்தோடு அவர்களுக்கு மாணவர்களை புரிந்த கொள்ளல், அவர்கள் மனநிலையை அறிதல், அவர்கள் குறை பாடுகள் கண்டு நிவர்த்தி செய்தல் என்பனவு சொல்லிக் கொடுக்கப்படும். தாதிகளுக்கு  படிப்பிக்கும் ஒரு ஆசிரியருக்கு மனிதருக்கு இருக்கும் வருத்தங்கள் பற்றிய அறிவு அதிகமாகவே இருக்கும். எங்கள் ஆசிரியருக்கு நிறையவே இருந்தது. நான்  முதலாவது பரீட்சை எழுதி கொடுத்ததும் எனது  பிரச்சனையை அந்த ஆசிரியரால் முழுமையாக புரிந்துகொள்ள முடிந்தது.  எனது கையெழுத்து மோசமாய் இருந்ததோடு எழுத்துப்பிழைகளால் அவரால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆசிரியர் என்னைக்கூப்பிட்டுக் கதைத்தார். அவருக்கு மருத்துவறீதியாக அந்தப் பிரச்சனையை அணுக முடிந்தது.  நீ மீண்டும் மொழி படிக்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக என்னை கணனியில் எழுதுமாறும், அதன்மூலம் இயலுமான அளவு எழுத்துப்பிழைகளை திருத்துமாறும் கூறி அதற்கான ஏற்பாட்டை செய்து தந்தார். அத்தோடு எனக்கு உள்ள குறைபாடு Word Blindness ’சொற் குருட்டுத்தன்மை அல்லது கூகிளில் வார்த்தை பார்வையின்மை என்று இருக்கிறது’  என்பதையும் விளங்கப்படுத்தினார். அதில் நிறையப் பிரிவுகள் இருப்பதோடு அதன் தாக்கம் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். ஓவ்வொரு மனிதனும் எப்படித் தனித்தன்மையானவனோ அப்படியே அவனது மூளையும் தனித்தன்மையானது. அதன் அமைப்பு ஆபூர்வங்களை, அதிசயங்களை தருகிறது. அந்த விந்தையை மனிதன் இன்னும் மழுமையாக புரிந்து கொள்ளவில்லை.

இந்த பிரச்சனை இரண்டு விதமாக அணுகலாம். முதலாவதாக நீ எழுத்துப்பிழை விடுகிறாய், போய் தமிழை திரும்பப் படி என்றும் சொல்லலாம். இரண்டாவதாக நீ ஏன் ஏழத்துப்பிழை விடுகிறாய்? உனக்கு அதில் என்ன பிரச்சனை இருக்கிறது? அதற்கு எப்படி உதவலாம் என்பதான மாற்றுப் புரிதலுக்கும் வரலாம். துர்ரதிஸ்ரவசமாக அனேக தமிழர்கள் முதல் வகையாக இருப்பது மனவருத்தமானது. அதற்காக இரண்டாவது வகையாக சிந்திப்பவர்களே கிடையாது என்று கூறிவிட முடியாது.

அந்த ஆசிரியர் என்து பிரச்சனையை புரிந்து வைத்திருந்தார். அதற்காக ஐரோப்பியர்கள் எல்லோரும் அப்படித்தான் இருப்பார்கள் என்பது அர்த்தமாகாது. எங்களுக்கு இடைநிலைப் பரீட்சை வந்தது. நோய், நோயை கடடுப்படுத்துவதற்கான நடவடிக்கை, எங்கள் கருத்துக்கள், செயற்பாடுகள் போன்றவை அடங்கி அட்வணை தயாரித்து கொடுக்க வேண்டும். நான் தயாரித்து கொடுத்தேன். புள்ளிகள் நான் எதிர்பார்த்ததைவிட குறைவாக வந்தது. ஆசிரிய  பாரீட்சகரிடம் இருந்து எனது பரீட்சைத்தாளை  வாங்கிப்பார்த்தார். புள்ளிகள் அதிகமாக குறைக்கப்பட்டிருந்தன. ஆசிரியர் பரீட்சகரிடம் விளக்கம் கேட்டார். அதற்கு அவர் எழுத்துப் பிழைகளுக்காகப் புள்ளிகள் குறைக்கப்பட்டது என்று கூறினார். ஆசிரியர் எழுத்துப்பிழைகளுக்கா புள்ளிகள் குறைக்கப்படக்கூடாதுதென  எனக்காப் போராடிப்பார்த்தார். பரீட்சகர் தனது நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. ஐரோப்பயரில்கூட எல்லோருக்கும் பிரச்சனைகள் புரிந்திருக்கும் என்பதில்லை.

கடைசித்தேர்வு நேர்முகப் பரீட்சை போன்று நடந்தது. அதில் எனக்கு மட்டுமே அதிகூடிய புள்ளிகள் கிடைத்தன. நோர்வேயில் 6 மிகவும் கூடிய புள்ளி. அது எனக்கு கிடைத்திருந்தது.  எங்களோடு படித்த சுதேசிகளுக்குகூட அது கிடைக்கவில்லை. எழுத்துப்பிழை என்கின்ற பிரச்சனைக்காக நான் சோர்ந்துவிடவில்லை. அந்த ஆசிரியரையும் மறந்துவிடவில்லை. நல்ல ஆசான் கிடைப்பது பாக்கியம். என்னைப் பொறுத்தவரைம் ஒருசிலர் கிடைத்திருக்கிறார்கள். அவரில் இந்த ஆசிரியையும் ஒருவர்.

குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்னும் அருமையான நாவலில்  சுந்தர ராமசாமி “இந்நுாலை இயன்றவரை பிழைகளற்ற நேர்த்தியான பதிப்பாகக் கொண்டுவர விரும்னேன். இவ்விருப்பம் நிறைவேற, தங்கள் வேலை நெருக்கடிகளுக்கிடையிலும் எனக்கு உதவியவர்கள் என் நண்பர்கள் சி.மோகன், ஆ.இரா.வேங்கடசலபதி,என்.சிவராமன், கி.அ.சச்சிதானந்தம் ஆகியோர்”  என்பதாக எழுதுகிறார். எழுத்து என்பது தமிழைப் பொறுத்தவரை, அது ஒரு சமூகப்பணி. அதற்கு உதவும் திறன் உடையோர் நிறையவே எம்மிடம் உண்டு. அவர்கள் உதவி தமிழுக்க வளம் சேர்க்கும்.

செரி. ஒருவரிடம் நாம் எழுத்து, வாசிப்பு பிரச்சனையை காணும் போது எப்படி அணுகப் போகிறோம்? அவரின் பிரச்சனையின் மூலத்தை அறிந்து அதற்கான விமர்சனத்தை, விடையை  வைப்போமா அல்லது எழுந்த மானத்தில் எதாவது சொல்லிவிட்டு செல்வோமா? நல்ல கல்வியறிவு உள்ளவர்களே சிலவேளையில் எழுந்தமானமாக கருத்து சொல்லும்போது வேதனையாக இருக்கிறது. இதை நாங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.