Naalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)

Naalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)

நோர்வே, இலங்கை, இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலே உள்ள அரசியல் யதார்த்தங்கள் புகலிடத்தமிழ்க் குடும்பம் ஒன்றின் எதிர்காலம் பற்றிய இனிய கனவுகளை எவ்வாறு அலைக்கழிக்கின்றன என்று காட்டும் கதை.

அகிம்சையின் அனைத்து முறையீடுகளும் தீர்ந்து போனபின் ஆயுதம் தரிக்க நேர்ந்த  அவலத்தை தேவகுரு உணர்ந்திருக்கிறார். எனினும்,  தாயகத்தில் தோற்றுவிட்ட அகிம்சை, புகலிடத்திலாவது வெல்லும்  என்ற நம்பிக்கையில், தனக்கு நேர்ந்த அவமதிப்புகளை எல்லாம் சகித்துக்  கொண்டு தமது உறுதியில் நிற்கிறார். அந்த வன்முறை நொஸ்குகள்,
தேவகுருவின் மனித நியாயத்தை உணர்வார்களா? லேனா என்ற பெண் மனத்தில் விழுந்த நியாயத்தின் சிறுபொறி, இனவெறியில் இருண்ட  அந்த நெஞ்சுக் கூட்டுக்குள் ஒளியேற்றுமா? தெரியவில்லை. என கவிஞ்ஞர் இன்குலாப்பால் வருணிக்கப்படும் இந்த நாவல் 1999 ஆண்டு வெளிவந்தது.