காத லொருவனைக் கைப்பிடித்தே, அவன்
காரியம் யாவிலும் கைகொடுத்து
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி
பாரதியார் கனவு கண்ட இத்தகைய புதுமைப் பெண்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலே தோன்றுதல் நமது வாழ்வியலுக்கு மிகவும் அவசியம். பெண்ணியம் என்பது மலிவான கோசம் அல்ல. அது நமது வாழ்வியலை
செம்மைபடுத்தவதற்கு அவசியமான தர்மம். இத்தகைய ஒரு நம்பிக்கையிலேதான் பரதேசி எழுதப்பட்டுள்ளது.