இ.தியாகலிங்கம் ( Thiagalingam Ratnam)
பிறப்பு 1967,  காரைநகர், இலங்கை,
தற்போதைய தேசியம் நோர்வேஜியர்
புனை  பெயர்கள் காரைநகரான்,காரையூரான்
கல்வி கனினிப்பொறியியலாளர்
பணி கனினிப்பொறியியலாளர்
பணியகம் OUS (http://www.oslo-universitetssykehus.no)
அறியப்படுவது ???
சமயம் இந்து
பெற்றோர் இரத்தினம்,
பரமேஸ்வரி
இணையதளம்  [1]

இ. தியாகலிங்கம் (பிறப்பு: 1967) ஈழத்துப் புதின, சிறுகதை எழுத்தாளர்? காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறேன்.

பொருளடக்கம்

  • 1 வாழ்க்கைச் சுருக்கம்
  • 2 படைப்புகள்
  • 3 விருதுகள்
  • 4 இணைப்புகள்

வாழ்க்கைச் சுருக்கம்

தியாகலிங்கம் ஆகிய நான் இலங்கையின் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவன். 1967 ஆம் ஆண்டில் வேலுப்பிள்ளை இரத்தினம், இரத்தினம் பரமேஸ்வரி ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த நான்  ஆரம்பக் கல்வியை காரைநகர் யா/யாழ்ற்றன் கல்லூரியின் கனிஸ்ர பிரிவிலும், தொடர்ந்து சாதாரண தரத்தை  யா/யாழ்ற்றன் கல்லூரியிலும், உயர்தரத்தை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் பயின்றேன். 1984 ஆம் ஆண்டில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து, தமிழரின் கனவான தனி நாட்டிற்காகப் போராடப் புறப்பட்டுச் சென்றேன். தமிழகத்தில் அதற்கான இராணுவப் பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டதோடு, சென்னையில் அரசியல் பயின்று, அதைத் தோழர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் பணிபுரிந்தேன். பின்பு முகாம் ஒன்றிற்குப் பொறுப்பாளராகவும் பணிபுரிந்தேன்.

அங்கு இருக்கும் போதே முகாமில் வெளியிடப்பட்ட கையெழுத்துப் பிரதிகளிலும், தமிழீழமானவர் பேரவையால் வெளியிடப்பட்ட சஞ்சிகையிலும் எனது படைப்புகள் வெளிவந்தன.

கடைசியாகத் திருவாரூரில் நடைபெற்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மாநாட்டில் பங்குபற்றி, அதில் கிடைத்த ஞானத்தின் முடிவில்  அந்த இயக்கத்தைத் துறந்து, எனது வழியில் புறப்பட்டேன். அப்படியும் சென்னையில் ஏற்பட்ட தொந்தரவால்  அங்கிருந்து புலம்பெயர்ந்து நோர்வேக்கு வந்தேன்.

பின்பு நோர்வேயில் மேற்கொண்டு படித்துக் கணினிப் பொறியியலாளரான  நான், இங்கிருந்து எனது எழுத்துப்பணியை 1987 தொடக்கம்  செய்து வருகிறேன். எனது சில கவிதைகள் முதலில் இராணி, வீரகேசரி போன்றவற்றிலும் நோர்வே மொழியில் எழுதப்பட்ட கவிதைகள் பின்மார்க்கன் என்னும் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டன. அத்தோடு நோர்வேயில் இருந்து வெளிவந்த சுவடுகளில் சிறுகதைகளும், சர்வதேசதமிழரில் நாவல்களும் பிரசுரிக்கப்பட்டன. எனது முக்கிய படைப்புக்களாக நாவல்களே உள்ளன.

படைப்புகள்

விருதுகள்

செந்தமிழ் செல்லும் வழியெதுபார் – கவிதை – அவுஸ்ரேலியா தமிழ்ச்சங்கத்தின் பரிசு பெற்றது.

இணைப்புகள்

இணையத்தளம் முகநூல்