nortamil.no இல் பிரசுரிக்கப்பட்டது.

மண்டேலா

nelson-mandela

மார்க்கிசத்திற்கு விரோதப் போக்கைக் காட்டினார் என்பதாக ஒரு விவாதம் அரங்கேறி இருக்கிறது. அவர் மார்க்கிசம் பற்றி அக்கறைப்படாவிட்டால் அதில் என்ன தப்பு இருக்கிறது? அதைத் தப்பாக பார்த்த காலம் மலையேறிவிட்டது. உரிமைகளுக்காக அந்தக் கொள்கை இல்லாது போராட முடியாது என்கின்ற மாயை இளம் சமுதாயத்திடம் இப்போது இல்லை. எல்லோரும் சமமாக நலமாக வாழவேண்டும் என்பது உன்னதமான கொள்கை. அதற்காக உள்ளவனை இல்லாமல் செய்வதோ அல்லது மனித அவலத்தை உண்டுபண்ணி மானிடம் வெட்கும் செயலைச் செய்வதோ நியாயமாகாது. இன்றுவரை உலகையாண்ட புரட்சியாளர்களைச் சாமானியன் எப்படி பார்க்கிறான்? அவர்கள் ஏற்படுத்திய அரசுகள் என்ன செய்தன?

நானும் பருப்பொருள் படிக்கும் Сталин1போது பாலும் தேனும் சோவியத் ஒன்றியத்தில் ஓடுவதான கற்பனையில் மிதந்தேன். அங்கு போனபோது அந்த நாட்டின் அலங்கோலம் புரிந்தது. அதன்பின்பும் தத்துவத்தை மட்டும் பார்ப்பதை நான் விரும்பவில்லை. நடைமுறைப்படுத்த முடியாத தத்துவத்தைக் கட்டிக்கொண்டு மாரடிப்பதிலும் நடைமுறைக்கு சாத்தியப்படுவதை செய்வது மேலானது என்பது என்னுடைய கருத்து.

மார்க்கிசத்தைத் தழுவி அரசகட்டில் ஏறிய பின்பு ஸ்ராலினால் சபீரியாவில் எத்தனை மில்லியன் மக்கள் கொலை செய்யப்பட்டார்கள்? இயற்கைக்கு புறம்பான மரணங்கள் 1928 க்கும் 1954 இடைப்பட்ட காலத்தில் 56 தொடக்கம் 62 மில்லியன்கள் என்று மதிப்பிடப்படுகிறது. அதில் ஸ்ராலினால் நேரடியாக கிட்டத்தட்ட 34 தொடக்கம் 49 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

469px-Maoசெரி மாகோவிசம் அதற்கு குறைந்ததா? அதன்பெயரால் வந்த அதிகாரத்தால், கைத்தொழில் புரட்சியில், கலாச்சார புரட்சியில், பதவியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எத்தனை மில்லியன் கொல்லப்பட்டார்கள்? 1958 க்கும் 1962 க்கும் இடையில் 45 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்தநிலையில் உலகத்தில் மக்கள் மார்க்கிசத்தை அல்லது கொமிசத்தை நம்புவார்களா? நம்பமுடியாத, சாத்தியப்படாத இந்த காலத்திற்கு இனி உதவாது என்கின்ற கொள்கையை நாம் துாக்கிப் பிடிப்பதால் சாதிக்கப் போவது என்ன? கார்ல் கென்றிக்ஸ் மார்க் அறிவாளி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதீத அறிவும் தத்துவங்களும் சிலவேளை தனிமனித வழிபாட்டில் நசிங்கிப் போய்விடும் என்பதை வராலாறு கூறிநிற்கிறது.

9.-Pol-Potஇசங்களால் கொல்லப்பட்டவர்களின் தொகையை பட்டியல் இட்டால் அது நீண்டு செல்லும். நாங்கள் போல் பொட்டை இன்னும் மறந்திருக்க முடியாது. கிட்லரின் நாசிசம் உலகத்தை அழித்ததையும் மறந்துவிட முடியாது. வடகொரியாவில் இன்று என்நடக்கிறது என்பதை பார்த்திருப்பீா்கள். ஒவ்வெரு மனிதனும் தனித்துவமானவன். தனித்துவமான எண்ணங்கள், செயற்பாடுகள் கொண்டவன். ஓரே அச்சில் வார்த்து ஒரேவிதமாகச் செயற்பட வைக்க இயந்திர மனிதர்கள் அல்ல அவர்கள். ஏற்றத்தாழ்வு இல்லா உலகை கற்பனை செய்யலாம். அதை தத்துவத்தை வைத்து அடக்குமுறை கொண்டு அட்சியதிகாரமாக்க முடியாது. செய்தால் என்ன நடந்தது என்பதற்கு அரைவாசி உலகு சாட்சி. தனிமனித சுகந்திரம் காக்கப்படாத அமைப்பில் முன்னேற்றம் வருவதில்லை. தனிமனித சுகந்திரத்தையும், மனிதத்தையும் காத்துப் பொருளாதார ஏழ்மையில்லாது சாமானிய மனிதனும் வாழும் நிலை வேண்டும். அது சில நாடுகளில் சாத்தியப்பட்டிருக்கிறது. நோர்வே நாட்டை அதற்கு உதாரணமாய் எடுத்துக் கொள்ளலாம். இங்கும் முறைப்பாடுகள் இருக்கின்றன. அதுதான் தனிமனித சுபாவம். அதை ஓரளவிற்காவது புரிந்து செயற்படும் அமைப்பு இருக்கிறது. அது ஒருவகையில் நல்லவற்றை மாத்திரம் இருபகுதியிடமும் தெரிந்தெடுத்த அரசியல் பொருளாதார அமைப்பு.

cambodia-_skullஇசங்களை கையில் எடுத்தோர் நரபலியாட்டம் எல்லையற்றது. நரபலி எடுத்ததை தவிர அது கூறியவற்றை அவர்கள் செய்யவில்லை. அவர்களால் செய்ய முடியவில்லை. ஜனநாயகத்தை கையில் வைத்திருப்பவர்களும் சிறிதளவில் அப்படித்தான் செய்கிறார்கள்.

உலகத்தில் கத்தி இல்லாமலும் இரத்தம் இல்லாமலும் உரிமைகள வெல்லலாம் என்று மாகத்மா காந்தி (அந்த தேசம் இப்போது எந்த பாதையில் நடைபோடுகிறது என்பது வேறுவிடயம்) மாட்டின் லுதர் கிங், நெல்சன் மண்டேலா ஆகியோர் நிருபித்தனர்.

01/00/1998. File pictures of Mahatma Gandhi

மார்க்கிசம் இல்லாமல், கத்தியில்லாமல், எதிரியைகூட மன்னித்து எல்லா இனமும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று பாடுபட்ட மாமனிதரை மார்க்கிசம் பயிலவில்லை என்று சொல்வதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா. பயின்றிருந்தால் இன்றைய தென்னாபிரிக்கா எப்படி இருந்திருக்கும் ? கற்பனை செய்து பாருங்கள் வாசகர்களே. அடக்குமுறைக்கு எதிராகப் போரட வேண்டும். அதற்காக துப்பாக்கி முனையில்தான் அதிகாரம் பிறக்கும், உரிமை கிடைக்கும் என்று நினைத்தால் அதே துப்பாக்கி எங்களுக்கு எதிராகத் திரும்புவதற்கு எவ்வளவு நாட்கள் எடுக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும். எங்கள் பெடியளே எங்களுக்கு எதிராகத் துப்பாக்கியை திருப்ப முடியும் என்றால் யார் திருப்ப முடியாது? துப்பாக்கி என்பது துப்பாக்கி அல்ல. அதிகாரம். உன்கையில் துப்பாக்கி இருக்கும் போது மனித ஜீவன்கள் மதிப்பில்லாத பிண்டமாய்த் தெரியும். கொல்வது போதை தரும். மனித அவலம், வேதனை வேடிக்கையாகும். கொல்வது குற்றமில்லாத தொழிலாகும். இதற்கான ஆதாரத்திற்கு நாங்கள் அலையத் தேவையில்லை. எங்கள் கைகளிலேயே அது நிறைய இருக்கிறது.

Martin-Luther-King-Jr-9365086-2-402இந்த நரபலியெடுப்புக்கள் இல்லாது ஒரு நாட்டிற்கு விடுதலை பெற்றுத்தர முடிமென்பதை நிரூபித்த மாபெரும் மனிதர் மண்டேலா. எதையும் மறக்கலாம் ,மன்னிக்கலாம் என்பதை நிரூபித்த மகாத்மா. சிலர் அவரது ஆரம்ப காலம் பற்றி விமர்சிக்கலாம். பிழை என்பதையே புரிந்து கொள்வது இருந்துவிடும் தலைவர்கள் எத்தனைபேர்? பிழைகளைத் திருத்தி ஒரு இனத்தின், நாட்டின் அழிவைத் தடுத்த அவரது தியாகத்திற்கும் பொறுமைக்கும், விட்டுக் கொடுப்பிலாத சுகந்திர வேட்கைக்கும் முன்பு எப்போதோ எங்கோ உருவாக்கப்பட்ட இறக்குமதி சரக்கை வைத்துக்கொண்டு அந்த மாமனிதரிடம் குறை சொல்வதை என்வென்று ஏற்றுக் கொள்வது?

போராட்ட வடிவங்கள் இனிவரும் காலங்களில் மாறவேண்டியது காலத்தின் கட்டாயம். துப்பாக்கியும், அரிவாளும், இரத்தமும் இனிவருங்காலங்களுக்கு உகந்ததில்லை. ஆயுதம் ஏந்தாது உலகில் போராடலாம் என்பதற்கு ஒருவழி பிறந்திருக்கிறது. பொறுமை வேண்டும். அதற்கு எங்கள் நாடுகளில் நுற்றுக்கணக்கான வருடங்கள் செல்லலாம். ஒரு காலத்தில் அவர்களும் புரிந்து கொள்வார்கள். செய்தது அநியாயம் என்று ஏற்றுக் கொள்வார்கள். அல்லது மாற்றமே தீண்டாத மனிதர்களாய் அவர்கள் இருக்க வேண்டும். ஐரோப்பியர்களே இரண்டாம் உலகமாக யுத்தத்தில் செய்த தப்பிற்கு இப்போதுதான் மன்னிப்பு கேட்கிறார்கள். எங்கள் நாடு அதைப்பற்றி நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.

வாதங்கள் பலவாறு முன்வைக்கலாம். கற்பனையில் மிதக்கலாம். நடைமுறையில் எது சாத்தியம்? எது மனிதத்திற்கு அழிவைத்தராது? அதேவேளை அவன் போராட்டத்தை வலுவோடு முன்னெடுத்து செல்லும்? இக்காலத்துக்கும், எக்காலத்திற்கும் பொருத்தமாக இருக்கும்? என்பதை புரிந்து செயல்பட்ட மனிதனையும் குறைசொல்ல விவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் விவாத்தையும் செவிமடுத்து மண்டேலா போல் மன்னித்துவிடுவோம். அவர் எயிட்சிற்கு எதிராக கடைசி காலத்தில் போராடினார். போராட்டத்தில் அவருக்கு கடைசிவரையும் நம்பிக்கை இருந்தது. வன்முறையிலும் ஆயுதத்திலும் அவர் நம்பிக்கை வைக்கவில்லை.

மன்னிப்பு, மறப்பு இல்லையேல் சமாதானம் இல்லை என்பதை உலகிற்கு புகட்ட அந்த மனிதருக்கு இசங்கள் தேவைப்படவில்லை. தேவையென்று எடுத்தவர்கள் மனிதத்தைக் குழிதோண்டிப் புதைத்தனர். புதைக்கின்றனர். நான் அவர்களுக்குப் பின்பு போவதற்கு தயார் இல்லை. நீங்கள்?